ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி.. கையும் களவுமாக பிடித்த போலீசார்!
தஞ்சையை அடுத்த கொல்லங்கரை கிராமத்தில் கோவிந்தராஜ் வசித்து வந்தார். இவரது மனைவி சுகந்தி. கடந்த சில மாதங்களுக்கு முன் கோவிந்தராஜ் இறந்து விட்டார். இதனால் கணவர் பெயரில் உள்ள சொத்தை தன் பெயருக்கு மாற்ற சுகந்தி முயன்றார். இதற்காக சுகந்தி ஒரு மாதத்திற்கு முன்பு கொல்லங்கரை கிராம நிர்வாக அலுவலர் வள்ளியிடம் விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பம் தொடர்பாக அதிகாரி சுகந்தியை பல நாட்களாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வரவழைத்தார்.
ஆனால் பட்டா மாற்றும் பணி மட்டும் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் பட்டாவை மாற்றி தருவதாக வள்ளி கூறினார். ஆனால் சுகந்திக்கு லஞ்சம் கொடுக்க விருப்பமில்லை. இதனால் அவர் தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி, கொல்லங்கரை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராமச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பத்மாவதி, சரவணன், போலீஸ் அதிகாரி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் பதுங்கி இருந்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர் கூறிய அறிவுரைப்படி, சுகந்தி, ரசாயன தடவிய நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் வள்ளியிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வேகமாக கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் நுழைந்து வள்ளியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர், அவர் மீது கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!