மது, மாது பார்ட்டி.. மனைவியை மாற்றிக்கொண்டு உடலுறவு.. கையும் களவுமாக போலீசிடம் சிக்கிய கும்பல்..!!
ஈ.சி.ஆரில் வார இறுதி நாட்களில் கணவன் மனைவியை மாற்றிக் கொள்ளும் நிகழ்வில் ஈடுபட்ட 8 பெண்களை மீட்ட போலீசார், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கும்பலை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்த விளம்பரத்தை பார்த்து ஆசையில் ஏராளமான இளைஞர்கள் அவர்கள் மது, மாது விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான பணத்தை வசூலித்துள்ளனர். இது போன்று கோவை, திருச்சி என பல ஊர்களில் நடத்தி விட்டு அடுத்த கட்டமாக சென்னையில் மனைவிகளை மாற்றி கொண்டு செக்ஸ் வைப்பதற்கான அழைப்பும் விடுத்துள்ளனர்.
இதற்காக நவம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதியை குறித்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பும் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் ஒரு பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். இது தொடர்பாகவும் சமூக வலைதளத்தில் அழைப்பு விடுத்துள்ளனர். இறுதியாக சனிக்கிழமை கணவன் மனைவி என கூறிக் கொண்டு 8 தம்பதிகளும், அவர்களுடன் இளைஞர்கள் மற்றும் அங்கிள்ஸ்சும் 10 பேரும் வந்துள்ளனர். பண்ணை வீட்டில் அதிக சத்தத்துடன் பாடல் இசைக்கவிட்டு அரை நிர்வாண ஆடைகளுடன் பெண்கள் குத்தாட்டம் போட்டுள்ளனர். மது, கஞ்சா என போதையில் மிதந்து ஆட்டம் போட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.
இதே போல அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமையும் பார்ட்டி தொடர்ந்து நடைபெற்று உள்ளது. இதில் 7 சிங்கில்ஸ் மற்றும் அங்கில்ஸ் வந்துள்ளனர். இது தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையருக்கு வந்த தகவலையடுத்து பனையூரில் உள்ள பண்ணை வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அங்கு அதிக சத்தத்துடம் பார்ட்டியானது உச்சகட்டத்தில் சென்றுள்ளது. போலீசார் கதவை திறந்த உள்ளே சென்று பார்த்த போது அங்கு அரை குறை ஆடையுடன் இருந்த பெண்கள் அறையில் ஓடிப்போய் ஒளிந்து கொண்டனர். இதனையடுத்து கையும் களவுமாக 8 பெண்கள், 15 ஆண்கள் சிக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையின் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தது. ஒரு நபருக்கு மது மாது விருந்திற்கு 13000 ரூபாய் முதல் 20000 ரூபாய் பணம் வசூலித்து வந்ததும், கணவன் மனைவிகளை மாற்றிக் கொண்டு குழுவாக உடலுறவு கொண்டு பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. சிக்கியவர்களில் கணவன், மனைவியாக வந்திருந்த சிலர் வறுமையின் காரணமாக, குடும்ப சூழ்நிலையினால் இந்த தொழிலில் வந்து விட்டதாக கண்ணீர் விட்டு கதறியுள்ளனர். வந்திருந்த தம்பதிகள் மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், விருதுநகர், திருநெல்வேலி என பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்தனர்.
சிலர் வீடுகளுக்கு தெரியாமல் மனைவிகளிடம் பொய் சொல்லிவிட்டு வந்திருந்த ஆண்கள் செய்வதறியாது திகைத்தனர். காவல்துறையினர் அவர்களது வீட்டிற்கு தெரியபடுத்தி உறவினர்களை வரவழைத்து எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதே போல் 8 பெண்களையும் அனுப்பி வைத்தனர். 8 பெண்களின் கணவன் என கூறிய நபர்கள் மீது விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 100க்கும் மேற்பட்ட ஆணுறைகள், பாலுணர்வை தூண்டும் மாத்திரைகள், மதுபாட்டில்கள்,சிறிய அளவில் கஞ்சா, ஹூக்கா போன்றவற்றை பறிமுதல் செய்துனர்.
காவல்துறையில் சிக்கிக் கொண்டால் பர்த்டே பார்ட்டி என கூறி அதற்கு பிறந்த நாள் இருக்கும் ஒரு நபரை உடன் வைத்துக் கொண்டு நூதன முறையில் 5 ஆண்டுகளாக விபச்சார தொழிலில் கொடி கட்டி பறந்துள்ளது. இதனையடுத்து மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(48),குமார் (45),மதுரையைச் சேர்ந்த சந்திர மோகன் (41),சிதம்பரத்தைச் சேர்ந்த சங்கர் (35),சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த வேல்ராஜ் (40),திருநெல்வேலியை சேர்ந்த செல்வம் (37), திருக்கோவிலுரைச் சேர்ந்த பேரரசன் (32) மற்றும் திருச்சியை சேர்ந்த வெங்கடேஷ் குமார் (45) ஆகிய 8 பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.