முகமூடி அணிந்து வந்து மனைவியின் மீது தீ வைத்த கொடூரம்.. கணவன் வெறிச்செயல்!
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த அய்யம்பேட்டை கிராமம் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சித்ரா (32). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஆர்.கே.பேட்டையை சேர்ந்த பாலாஜி (41) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தம்பதிக்கு, 10 மற்றும் 8 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.இந்நிலையில், கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இரண்டு குழந்தைகளும் தாய் சித்ராவுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு சித்ரா வீட்டில் குழந்தைகளுக்கு உணவு கொடுத்து கொண்டிருந்தார்.
அப்போது முகமூடி அணிந்த நபர் ஒருவர் திடீரென தான் கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து சித்ரா மீது ஊற்றினார். அப்போது சித்ரா அடுப்பு பகுதியில் இருந்ததால் உடல் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.இதனால் அலறி துடித்த சித்ரா, பெட்ரோல் ஊற்றிய நபரை அணைத்துக்கோண்டு கதறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்தனர். பின்னர் அந்த முகமூடி அணிந்தவர் சித்ராவின் கணவர் பாலாஜி என்பது தெரியவந்தது.
இதையடுத்து பொதுமக்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்குமாடி பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த கணவர் திடீரென வந்து மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!