புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

 
அசைவம்

விஷ்ணுவை வழிபடுபவர்கள் மட்டுமல்ல இந்து மதத்தை சார்ந்த  அனைவருமே  புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதை காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றனர். இதற்கு ஆன்மிக ரீதியாக மட்டுமல்ல அறிவியல் ரீதியாகவும் காரணங்கள் உண்டு. 

நவக்கிரகங்களில் பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனை வழிபட வேண்டிய மாதம்  இந்த புரட்டாசி. புதன் சைவத்திற்குரிய கிரகம்  இதனால் அசைவம் சாப்பிடக்கூடாது.விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.  

திருப்பதி திருமலை பெருமாள்

 அறிவியைல் ரீதியாக சூரியனின் வலிமை புரட்டாசி மாதத்தில் மிகவும் குறைந்து காணப்படும்.இதனால்  நமக்கு செரிமானக்குறைவும், வயிற்று பிரச்சினைகளும் உருவாகலாம். மேலும் இந்த சமயத்தில் சாப்பிடும் கொழுப்பு நிறைந்த உணவுகள் கெட்டக்கொழுப்பாக உடலில் சேர்ந்து விடும். ஆதலால் அசைவ உணவை தவிர்த்து, உடம்புக்கும், வயிற்றிற்கும் நலம் சேர்க்கும் சைவ உணவுகளை உண்டு, செரிமானத்தை தூண்டும்  துளசி நீரை குடிப்பது நல்லது.  

திருப்பதி குடை வெங்கடாஜலபதி பெருமாள்

 புரட்டாசி என்பது வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.  பல  மாதங்களாக, வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து, புரட்டாசி மாதத்தில்தான் வெப்பம் குறைய ஆரம்பிக்கும். இதனால், உடம்பில் சூட்டை  கிளப்பிவிடும் காலம். கடும் கோடை  கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடிய வெப்பநிலை நிலவும் காலம்.  இந்த நேரத்தில் அசைவம்  சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி விடும். 

இதன் காரணமாகவே அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கி புரட்டாசியில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு போகும்  வழக்கத்தை விடாமல் கடைபிடித்து வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web