அட... பால் போன்ற வெள்ளை நிறத்தில் எருமை கன்றுக்குட்டி... ஆச்சர்ய உண்மை!
எருமை மாடு என்றவுடன் நினைவுக்கு வருவது கருப்பு நிறம் தான். ஆனால் பால் வெள்ளை நிறத்தில் எருமை மாடு பார்த்திருக்கிறீர்களா? வாய்ப்பே இல்ல என்று தான் நம்மில் பலரும் கூறுவோம். நிஜமாகவே கருப்பு நிற எருமை மாடு வெள்ளை வெளேரென்ற கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கரவுளியில் எருமை மாடு ஒன்று பால் போன்ற வெண்மையாகவும், அழகாக ஒரு கன்றுகுட்டியை ஈன்றது.
இதனைப் பார்ப்பதற்கு பசு கன்று போலவே காட்சியளிக்கிறது. இந்த எருமை கன்றுக்குட்டியின் உடலில் இந்த இடத்திலும் ஒரு சிறிய அளவில் கூட கருப்பு நிறமோ, அல்லது வேறு எந்த நிறமோ இல்லை என்பது தான் ஆச்சர்யத்தின் உச்சம். இந்த எருமை கன்றுக் குட்டியை பார்த்த உரிமையாளரும் குழம்பி போயிருக்கிறார். இந்த எருமை கன்று குட்டி தனது அழகால் இந்த உலகி ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதனால், கரவுளி அருகே இருக்கும் மச்சானி கிராமத்தில் இந்த கன்று குட்டியைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆச்சரியத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இது இயற்கையின் அதிசயம். உலகின் 8வது அதிசயம் எனக் கூறிச் செல்கின்றனர்.
இந்த வெள்ளை நிற எருமை கன்றுக்குட்டி ஜூலை 17ம் தேதி பிறந்தது. இது குறித்து எருமையின் உரிமையாளர் நீரஜ் ராஜ்புத் ஜூலை 17ம் தேதி அதிகாலை 4 மணிக்கு எருமை மாடு கன்றுக் குட்டியை ஈன்றதாகக் கூறியுள்ளார். அப்போது வெள்ளை நிறத்தில் பிறந்த கன்றுக் குட்டியைப் பார்த்து தாங்கள் ஆச்சரியம் அடைந்ததாகக் கூறியுள்ளார். அதே நேரத்தில் எருமை கன்றுக்குட்டி பிறந்ததில் இருந்து ஆரோக்கியமாக இருப்பதாகவும், அதன் தாய் அந்த வெள்ளைக்குட்டியை மிகவும் அரவணைத்துப் பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். சுற்றுவட்டார கிராமத்தில் வசித்து வருபவர்கள் இந்த வெள்ளை எருமை கன்றுக்குட்டியை பார்த்து செல்ல வருவதாகவும் கூறியுள்ளார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா