மின்மோட்டார் பழுது நீக்கம் செய்து கொண்டிருந்தபோது விபரீதம்.. மின்சாரம் தாக்கி விவசாயி பலி!

 
பாண்டியன்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கோ.ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் பாண்டியன். இவர் விவசாய நிலத்தில் உள்ள மின் மோட்டார், பழுதாகி போனதால், சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, மின்சாரம் பாண்டியனை தாக்கியுள்ளது. இதனால் விவசாயி பாண்டியன் தூக்கி வீசப்பட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது உறவினர்கள் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது.

பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.  இதுகுறித்து கம்மாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் மோட்டார் சரிசெய்து கொண்டிருந்த போது விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web