செல்ஃபி எடுக்கும் போது விபரீதம்.. கால் தவறி அணையில் விழுந்த இளம்பெண்.. அதிர்ச்சி வீடியோ வைரல்!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள மிரியாலகுடாவுக்கு ஒரு குடும்பம் காரில் சென்று கொண்டிருந்தது. வழியில் நல்கொண்டா மாவட்டம் வெமுலபள்ளி என்ற இடத்தில் நாகார்ஜுனா சாகர் இடது கரை கால்வாயில் காரை நிறுத்தினர். நாகார்ஜூனா சாகரில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன.
In an incident that could have claimed her life, a woman fell into the Nagarjuna Sagar Left Bank Canal while taking selfies along with her family. However, she was rescued after locals rushed her to safety.
— Hate Detector 🔍 (@HateDetectors) August 31, 2024
The incident took place on Friday morning at #Vemulapally mandal… pic.twitter.com/DfYVd3FZfw
இதனால் இந்த கால்வாயில் கடந்த சில வாரங்களாக தண்ணீர் சீற்றத்துடன் செல்கிறது. இந்நிலையில், வெமுலப்பள்ளி பாலத்தில் இடதுபுற கால்வாய் அருகே குடும்பத்தினருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டபோது, கால் தவறி கால்வாயில் தவறி விழுந்தார் அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்.
இதை உடனடியாக கவனித்த அப்பகுதி மக்கள் உடனடியாக கால்வாயில் குதித்து அந்த பெண்ணை சுவரில் கயிற்றால் கட்டி மேலே பாதுகாப்பாக அழைத்து வந்தனர். பெண்ணுக்கு எதுவும் ஆகவில்லை என்று அங்கிருந்த அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா