திருட முயன்ற போது விபரீதம்.. இளைஞரை கட்டி வைத்து அடித்தே கொன்ற பொதுமக்கள்.. போலீசார் தீவிர விசாரணை!

 
தக்கோலம் போலீசார்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பாடி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (24). இவரும், அவரது நண்பரும் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் வசிக்கும் வேதாச்சலம் மகன் விஜயகுமார் வீட்டில் புகுந்து திருட முயன்றதாக கூறப்படுகிறது. வேதாச்சலம் குடும்பத்தினர் கூச்சலிட்டதையடுத்து, மாதேஷின் நண்பர் தப்பி ஓடியதால், மாதேஷ் சிக்கியதாக தெரிகிறது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் மாதேஷை கட்டி வைத்து அடித்ததாக கூறப்படுகிறது. இதில், மயங்கிய நிலையில், வேதாச்சலத்தின் குடும்பத்தினர், 100 என்ற அவசர எண் மூலம், காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், தக்கோலம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, மயங்கி கிடந்த மாதேஷை மீட்டு, அரக்கோணம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து வேதாச்சலம், அவரது மகன் விஜயகுமார் உள்ளிட்ட 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.  மேற்கொண்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web