நடிகர் பவன் கல்யாண் என்னாச்சு... பதறிய ரசிகர்கள்!

 
தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா உறுதி!..
 

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பிறகு நடிகர் பவன் கல்யாண், இடைவிடாமல் ஆந்திர வளர்ச்சிக்காக உழைத்து வருகிறார். விஜயவாடாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பவன் கல்யாண் கடந்த இரண்டு நாட்களாக பொது வெளியில் வரவில்லை என்று விமர்சிக்கப்பட்ட நிலையில், நடிகர் பவன் கல்யாண் வைரஸ் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அவர் இரண்டு கூட்டங்களில் கலந்து கொண்டார்.

பவன் கல்யாண்

 அதன் பின்னர் நேற்று விஜயவாடாவில் வெள்ள நிலைமைகளை கண்காணிக்க அதிகாரிகளையும் சந்தித்தார். பவன் கல்யாண் தனது பொது தோற்றம் நிவாரண நடவடிக்கைகளுக்கு இடையூறாக மாறும் என்றும் தெரிவித்தார். 

 பவன் கல்யாண்

பவன் கல்யாண் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் தனது வரவிருக்கும் ஹரி ஹர வீர மல்லு மற்றும் உஸ்தாத் பகத் சிங் ஆகியவற்றின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவன் கல்யாண் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த அனைத்து படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, அரசியலில் முழுமையாக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

From around the web