புதன் பிரதோஷம்... இந்த மந்திரத்தை சொல்ல மறக்காதீங்க... செல்வ வளம் பெருகும்!

 
வில்வம் சிவன் சிவபெருமான் பிரதோஷம்
இன்று ஐப்பசி மாதம் நம்பவர் 13ம் தேதி வளர்பிறை புதன் பிரதோஷம். ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி, அமாவாசைக்கு பிறகு வரும் 13வது நாள் திரையோதசி திதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை பிரதோஷம் அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து பிரதோஷங்களுமே சிறப்பு வாய்ந்தவை தான் எனினும் புதன்கிழமைகளில் வரும் பிரதோஷ நாட்களில் விரதமிருந்து சிவபெருமானையும், நந்தியம் பெருமானையும் மனமுருகி பிரார்த்தனை செய்திட கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு. அத்துடன் தொழில் விருத்தியடையும். அலுவலகப் பணியாக இருந்தாலும் பதவியில் உயர்வு மேன்மை கிட்டும். 

பிரதோஷம் சிவன் நந்தி

ஒருவர் தொடர்ந்து 11 பிரதோஷ நாளில் வழிபாடு செய்தால் துன்பங்கள் கரைந்து  எண்ணிய காரியம் ஈடேறும். இன்று செய்யும்  சிவ வழிபாடு சூரியனின் அருளும், சிவ பெருமானின் அருளும் ஒரு சேர கிடைக்கும் என்கின்றனர் ஆன்மிக அன்பர்கள்.அத்துடன்  புகழ், பெருமை, மகிழ்ச்சி, அமைதி மற்றும் நீண்ட ஆயுளும் கூடும். பிரதோஷ நேரத்தில் வீட்டின் அருகில் இருக்கும் ஆலயங்களில் சென்று அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், பழம், வில்வம், தேன், பன்னீர், இளநீர் , விபூதி வாங்கி கொடுக்கலாம். அத்துடன் சிவாய நம மந்திரத்தை மனதில் பிரார்த்தனை செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும். 

பிரதோஷ நேரத்தில் உச்சரிக்க வேண்டிய மந்திரம்:

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய!
நீலகண்ட்டாய சம்பவே!
அம்ருதேஸாய சரவாய!
மஹாதேவாய தே நமஹ!

இன்றைய தினம் முழுவதுமே உடல் எந்த பணியில் ஈடுபட்டிருந்தாலும் மனம் ‘ஓம் நமசிவாய’ என்ற எளிய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். இன்றைய தினம் விரதமிருந்து சிவனின் நினைப்பில் அவரின் நாமத்தை உச்சரித்து, மாலையில் சிவன் கோவில்களில் நடைபெறும் பிரதோஷ நிகழ்வுகளில் கலந்து கொண்டு நந்தி பகவானையும், சிவபெருமானையும் வழிபடுவது மிகவும் சிறப்பு. 

சிவபெருமானுக்கு உகந்த நாள் பிரதோஷ நாள். பிரதோஷ வேளை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில் நமது கர்மவினைகள் நீங்கவும், நமது பிரார்த்தனைகள் நிறைவேறவும் வழிபாடு செய்திட மேன்மையான பலன்களை பெறலாம். திங்கட்கிழமையான இந்த பிரதோஷ நாளில் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு சிவபெருமான் உடனே செவி சாய்க்கிறார் என்கின்றது சிவபுராணம். பிரதோஷத் தினத்தில் சிவ வழிபாடு செய்திட வாழ்வின் இன்னல்கள் நீங்கி சுபிட்சங்களை பெறலாம் .  

அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பதுடன் வயிற்றுப் பசியால் வாடுபவர்களுக்கு அன்னமிடலாம். இந்த காலத்தில் தான் சிவன், நந்தியின் கொம்புகளுக்கிடையில் ஆடுகின்றார். இந்த நேரத்தில் அவரின் ஆனந்த தாண்டவத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் கூடி நின்று பக்தி பரவசத்துடன் இந்த பிரதோஷ வேளையில் கண்டுக் களிப்பதாக ஐதிகம்.  

செல்வ செழிப்புடன் வாழ செவ்வாய் பிரதோஷம்!  வழிபடும் முறை!

பிரதோஷ வேளையான மாலை நேரத்தில் வீட்டில் இருந்த படியே ‘ஓம் நமச்சிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்க இதுவரை முன்னேற்றத்தை தடுக்கும் கர்ம வினைகள் அதுவாகவே அகன்று விடுவதை அனுபவ பூர்வமாக உணரலாம். இதனை தொடர்ந்து செய்வதால் உடலும், மனமும் ஆரோக்கியம் பெறுகிறது.  நம் குடும்பத்தில் அமைதியும்,மகிழ்ச்சியும் பெருகும். நம்மை எதிரிகளாக நினைப்பவர்கள், அவர்களாகவே நமது பாதையிலிருந்து விலகிச் சென்று விடுவார்கள். அதிலும்   திங்கட்கிழமையான  இன்று அனுசரிக்கப்படும் பிரதோஷ வழிபாடு சகல செல்வங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் . பிரதோஷ நேரத்தில் அருகில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை மனமார தரிசித்து உளமாற பிரார்த்தனை செய்து கொண்டால் வாழ்வில் அனைத்து இன்னல்களும் நீங்கி மேன்மை பெறலாம். 

தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web