முகூர்த்த நாள்... திருச்செந்தூர் கோயிலில் குவிந்த திருமண ஜோடிகள்!

 
திருமணம்
 

தமிழகத்தில் ஆடி மாதம் முடிந்து அடுத்தடுத்து வரிசையாக வளர்பிறை முகூர்த்த நாட்களாக வரும் நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், நேற்று வளர்பிறை முகூர்த்தம் என்பதால் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றன. இதனால் கோயில் வளாகமே திருமண வீட்டார்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 

திருச்செந்தூர்

முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web