சென்னைக்கு நவம்பர் கடைசியில் தான் அடுத்த மழை... வைரலாகும் வெதர்மேன் பதிவு!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இது குறித்து தற்போது வெதர்மேன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
KTCC (Chennai) last spells of rains are seen from this system from 17th morning /noon we head for good break for more than 1 week.
— Tamil Nadu Weatherman (@praddy06) November 16, 2024
=================
Delta and South Tamil Nadu the rains will continue particularly Delta to South Tamil Nadu districts can get heavy rains.
Sunday…
மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று நவம்பர் 17ம் தேதி காலை/மதியம் வரை மழை பெய்யும். அதன்பிறகு ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பில்லை நவம்பர் 17, 18 தேதிகளில் டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். ஈரோடு, நீலகிரி உட்பட பல மேற்கு மாவட்டங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவமழை இன்னும் நிறைவடையவில்லை, பருவமழை பெய்ய அதிகம் வாய்ப்புள்ளது. இந்த மாத இறுதியில் சக்கரம் ஒன்று தமிழகத்தை நோக்கி வருகிறது. அந்த சக்கரம் தீவிரமடையுமா? அல்லது அதற்கு பெயர் வைக்கப்படுமா? என்பதை கண்காணிக்க 10-12 நாள்கள் ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!