’’நீண்ட போருக்கு நாங்கள் தயார்’’.. ஹிஸ்புல்லா துணைத் தலைவர் திட்டவட்டம்!

 
நயீம் காசிம்

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஹிஸ்புல்லாவுடன் நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துமாறு கோரிய நிலையில், இஸ்ரேல் அதனை முற்றாக நிராகரித்துள்ளது. மேலும், மோதலை 21 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதற்காக இரு தரப்பினருக்கும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் கூட்டாக முன்வைத்த செயல் திட்டத்தை இஸ்ரேல் ஏற்கவில்லை.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

லெபனானில் கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் ஆயிரக்கணக்கான பேஜர்கள், வாக்கி டாக்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள், சூரிய சக்தி சாதனங்கள் போன்ற பிற சாதனங்களில் வெடிகுண்டை மறைத்து வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 7ம் தேதி முதல் நடைபெற்று வரும் காஸா போரில் ஹமாஸுக்கு ஆதரவாக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வரும் லெபனானின் ஹிஸ்புல்லா படைகளை குறிவைத்து இஸ்ரேல் கடந்த ஆகஸ்ட் தாக்குதலை நடத்தியதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பெய்ரூட்டில் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வை இஸ்ரேல் ராணுவம் தாக்கி கொன்றது. இதனை நேற்று முன்தினம் ஹிஸ்புல்லாவும் உறுதிப்படுத்தியது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் எதிரிகளுக்கு எதிராகவும் புனிதப் போரைத் தொடர இந்த அமைப்பு உறுதியளித்தது.

நஸ்ரல்லா கொல்லப்பட்ட பிறகு, நயீம் காசிம் ஹிஸ்புல்லாவின் துணைத் தலைவராக செயல்படுகிறார்ர். நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக தொலைக்காட்சியில் தோன்றிய அவர், இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை நடத்த முடிவு செய்தால், ஹிஸ்புல்லா போராளிகள் லெபனானை எதிர்த்துப் போராடவும், பாதுகாக்கவும் தயாராக இருப்பதாக இன்று கூறினார்.

இஸ்ரேல் - லெபனான் போர்

கடந்த சில மாதங்களாக ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ள சூழலில், ஹிஸ்புல்லா அமைப்பு புதிய தளபதிகளை நம்பி செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். நமது ராணுவத் திறனை இஸ்ரேலால் பாதிக்க முடியாது. துணைத் தளபதிகள் உள்ளனர். எந்த பதவியில் இருக்கும் தளபதி காயம் அடைந்தால் அவருக்கு பதிலாக இன்னொருவர் இருக்கிறார் என்றும் அவர் கூறினார். இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று உறுதியளித்த அவர், நீண்ட போருக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web