வயநாடு இடைத் தேர்தல்... இமாலய வெற்றியை நோக்கி பிரியங்கா!
2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய ராகுல் காந்தி, உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரு தொகுதிகளிலும் வென்ற ராகுல் காந்தி, ரே பரேலி மக்களவைத் தொகுதியை தக்கவைத்துக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றார்.
அவர் வயநாடு மக்களவைத் தொகுதியின் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து நவ.13ம் தேதி வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்து இன்று காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியிருக்கிறது.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பிரியங்கா காந்தி 1,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.
இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளிலேயே தேசிய அளவில் கவனக்குவிப்பு பெற்ற தொகுதியாக மாறியது கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல். நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 14 மாநிலங்களில் இருக்கும் 48 பேரவைத் தொகுதிகளுக்கும், வயநாடு மற்றும் மகாராஷ்டித்தில் ஒரு தொகுதி என இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!