தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து.. தூத்துக்குடியில் பரபரப்பு!

 
தண்ணீர் லாரி

தூத்துக்குடியில் குடிநீர் தொட்டி பள்ளத்தில் தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

தூத்துக்குடி மாநகராட்சி 45 வது வார்டு பிரையன்ட் நகர் 11 வது தெரு மேற்கு கட்டபொம்மன் நகர் பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பு தொட்டி மூடி அமைக்காமல் இருந்துள்ளது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம், மற்றும் மண்டலம் வாரியாக நடைபெற கூடிய மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தூத்துக்குடி

இந்நிலையில், இன்று குடிநீர் ஏற்றி வந்த தனியார் வாகனம் நிலையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க குடிநீர் தொட்டிக்கு தரமான மூடி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக தண்ணீர் லாரியில் இருந்து வீணாக வெளிவரும் நீரில் பொதுமக்கள் உற்சாகம் குளித்தனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web