இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டால் வாஷிங் மெஷின், கிரைண்டர் இலவசம்!

 
இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டால் வாஷிங் மெஷின், கிரைண்டர் இலவசம்!


தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கள் குறைந்து வருகின்றன. மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பல மாவட்டங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் அக். 10ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டால் வாஷிங் மெஷின், கிரைண்டர் இலவசம்!

அதன்படி கரூர் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அக்.10 ம்தேதி தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டமும் 100 சதவீத இலக்கை எட்டிப்பிடிக்கும் வகையில் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.
முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், 2வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய காலம் வந்த பிறகும் செலுத்தாதவர்கள் பெயர், முகவரி, அலைபேசி எண், ஆதார் எண் தகவல்கள் வீடு வீடாக சேகரிக்கப்படும்.

இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டால் வாஷிங் மெஷின், கிரைண்டர் இலவசம்!


கணக்கெடுப்பாளர் மூலம் அழைத்து வரப்படும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு நபருக்கு ரூ.5 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களில் மாவட்ட அளவில் குலுக்கல் முறை பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு வாஷிங் மிஷின், 2ம் பரிசு கிரைண்டர், 3ம் பரிசு மிக்ஸி, 4ம் பரிசு 25 நபர்களுக்கு குக்கர் மற்றும் ஆறுதல் பரிசாக 100 பேருக்கு பாத்திரங்களும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

From around the web