திருப்பதியை போலவே காத்திருப்பு கூடம் திறப்பு!

 
திருப்பதியை போலவே காத்திருப்பு கூடம் திறப்பு!


தமிழகத்தின் கடைக்கோடியில் கடற்கரையோரம் அமைந்துள்ளது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். உலக பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வருடத்தின் 365 நாட்களும் வருகை தருவர்.
கோவிலில் நிர்வாகத்திறனை மேம்படுத்தும் பொருட்டும், பக்தர்களின் பாதுகாப்பு தேவைகளின் அடிப்படையில் பக்தர்கள் காத்திருப்பு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பதியை போலவே காத்திருப்பு கூடம் திறப்பு!

திருப்பதியை போன்று இங்கும் முதல்கட்டமாக பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் ‘பக்தர்கள் காத்திருக்கும் கூடம்’ உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 408 பேர் அமரும் வகையில் இருக்கைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின் விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பதியை போலவே காத்திருப்பு கூடம் திறப்பு!

இந்த கூடம் நேற்று முதல் திறந்து வைக்கப்பட்டு உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.இதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தி நேற்று முதலே திருச்செந்தூருக்கு வருகை தரும் பக்தர்கள் இருக்கைகளில் அமர்ந்து விட்டு உற்சாகத்துடனும் நிறைவுடனும் தரிசனம் செய்து சென்றனர்.

From around the web