தமிழக வாக்காளர் 6.27 கோடியாக உயர்வு... வரைவு பட்டியலில் தகவல்!

 
வாக்காளர் பட்டியல்
 


நேற்று தமிழகத்தில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.27 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் நவம்பர் 28ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. 

வாக்காளர் பட்டியல்

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதியேற்பு நாளாக வைத்து தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், தேர்தல் கமிஷனின் www.elections.tn.gov.in என்ற இணையதளத்திலும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் 6 கோடியே 27 லட்சத்து 30,588 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 3 கோடியே 7 லட்சத்து 90,791 பேர் ஆண்கள்; 3 கோடியே 19 லட்சத்து 30,833 பேர் பெண்கள்; 8,964 பேர் மூன்றாம் பாலினத்தவர். மாநிலத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள சட்டசபை தொகுதியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லுார் உள்ளது.

வாக்காளர் பட்டியல்

இத்தொகுதியில், 3.38 லட்சம் ஆண்கள், 3.37 லட்சம் பெண்கள், 125 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 6.27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.மாநிலத்தில் குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதியாக, நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி உள்ளது. இங்கு, 85,065 ஆண்கள், 88,162 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 1.73 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.வாக்காளர் சிறப்பு முகாம் அடுத்த மாதம் 16, 17 மற்றும் 23, 24ம் தேதிகளில் நடக்க உள்ளது. இம்முகாமில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, ஆதார் எண் இணைக்க விண்ணப்பிக்கலாம். மற்ற நாட்களில், ஓட்டுச்சாவடி அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் விண்ணப்பம் அளிக்கலாம். இதுதவிர, https://voters.eci.gov.in என்ற இணையதளம் வழியாகவும், 'Voter help line' என்ற மொபைல் போன் செயலி வழியாகவும் விண்ணப்பிக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web