லாட்டரி மார்டின், விசிக ஆதவ் அர்ஜூனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
சென்னையிலும், கோவையிலும் லாட்டரி அதிபர் மார்டினுக்கும், விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இன்று அதிகாலை முதலே லாட்டரி தொழிலதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போன்று கோவை துடியலூரிலும் லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் இன்று அதிகாலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரும், லாட்டரி அதிபர் மார்ட்டீனின் மருமகனுமான ஆதவ் அர்ஜூனாவுக்கு சொந்தமான வீட்டிலும், அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!