வைரல் வீடியோ... கடையில் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்த கொள்ளையன்!

மெக்ஸிகோவின் மான்டெர்ரேயில் உள்ள Carnes Cares கடையில் நடந்த திடுக்கிடும் கொள்ளை முயற்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏப்ரல் 23ம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில், கொள்ளையன் ஹூடீ அணிந்து கையொப்பக் கவுண்டரில் சென்று துப்பாக்கியுடன் நுழைந்து பணம் கேட்கிறான்.
him preparing by putting his glasses away, was like a scene for a movie pic.twitter.com/yLkvoqkKGN
— non aesthetic things (@PicturesFoIder) March 22, 2025
அந்த நேரத்தில், பீஜ் நிற கவ்பாய் தொப்பி அணிந்து நின்று கொண்டிருந்த ஒருவர் கொள்ளையன் அசந்த நேரத்தில் அவரை கையும், களவுமாக பிடித்து விட்டனர். கடையில் இருந்த மற்றொரு ஊழியர் துப்பாக்கியை பறித்து பாதுகாப்பாக வைத்தார்.
பின்னர் கடை வெளியே தப்பிச் செல்ல முயற்சித்த நபரை, அந்த நபரும், மற்ற ஊழியர்களும் சேர்ந்து தரையிலே தள்ளி, அவர் தப்பி ஓட முடியாதபடி பிடித்துவிட்டனர். இந்நிலையில் போலீசார் 10 நிமிடங்களில் வந்ததால், யாருக்கும் காயம் ஏற்படாமல் மிகப்பெரிய அபாயம் தவிர்க்கப்பட்டது. சமூக வலைதளங்களில் பலரும் அந்த நபரின் துணிச்சலுக்கும் செயல்திறனுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!