வைரல் வீடியோ... பிக்காச்சூ போராட்டத்தில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம்…. பொதுமக்களுடன் செல்பி !

 
வைரல் வீடியோ... பிக்காச்சூ போராட்டத்தில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம்…. பொதுமக்களுடன் செல்பி ! 

துருக்கியில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் திடீரென சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், அண்டாலியா நகரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நபர் பிரபல போக்கிமான் கார்ட்டூனில் வரும் “பிக்காச்சூ” கதாபாத்திரம் வேடமணிந்து வந்தார். 

அப்போது அவரை கண்ட பொதுமக்கள் அவரிடம் சென்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். அதோடு பிக்காசோ உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை போராட்டக்காரர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.இதை தொடர்ந்து திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் தடியடி நடத்தினர். 

அங்கிருந்த போராட்டக்காரர்கள் அனைவரும் தப்பி ஓடிய போது அவர்களுடன் சேர்ந்து பிக்காச்சூவும் ஓடியது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். போராட்டக்களத்தில் பிக்காச்சூ கதாபாத்திரம் மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web