வைரல் வீடியோ... தப்பிச்சிர்றா கைப்புள்ள... கூட்டமாக வந்து சுற்றுலாப் பயணியை சூழ்ந்த குரங்குகள்!

தாய்லாந்தை சுற்றிப்பார்க்கவும் உற்சாகக்கடலில் நீந்தவும் ஓய்வுக்காகவும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அந்தவகையில் தாய்லாந்திற்கு சுற்றுலா வந்திருந்த ஒரு பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணியின் அமைதியான நீச்சல் அனுபவம் ஒரு நிமிடத்தில் சோகமாக மாறிவிட்டது. கேன் ஸ்மித் என்ற அந்த பிரிட்டிஷ் நபர், ஒரு நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தபோது, ஒரு குரங்கு வந்தது. முதலில் ஒரு குரங்கு மட்டும் வந்த நிலையில் திடீரென பல குரங்குகள் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டன. இதனால் அவர் அச்சத்தில் உறைந்தார்.
அந்த குரங்குகள் அருகில் வந்தபோது, “நீங்கள் என்னை நெருங்காதீர்கள்” என்று பலமுறை கூறிய கேன், பின்னர் அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயற்சித்தார்.இந்த சம்பவத்தை கேன் ஸ்மித் தனது டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில் “என் வாழ்க்கையில் கண்டு பதற்றமடைந்த தருணம் இது தான்” எனவும், “ஒரே ஒரு குரங்குடன் தொடங்கியது பின்னர் முழு கும்பல் வந்தது” எனவும் தனது வீடியோவின் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது 80000 பார்வைகளை பெற்றுள்ளது. நெட்டிசன்கள் பலரும் குரங்குகளின் நடத்தை மற்றும் கேன் ஸ்மித் அதை கையாண்ட விதம் குறித்து அவருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!