செக் பண்ணிக்கோங்க... இன்று இந்தியா முழுவதும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ2000/-!

 
விவசாயி

இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ6000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 3 தவணைகளாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.  அதன்படி ஒரு தவணைக்கு 2000 வீதம் வழங்கப்படுகிறது.

இதுவரை விவசாயிகளுக்கு 17 தவணை தொகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 18வது தவணை தொகை இன்று விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  இந்நிலையில் இன்று 18வது தவணைத்தொகை பணம் வங்கிகளில் வரவு வைக்கப்படும் நிலையில் இகேஒய்சி அப்டேட்டை சரி பார்க்காத விவசாயிகளுக்கு பணம் கிடைக்காது.  

விவசாயி உதவித்தொகை

இந்த செயல்பாட்டினை பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று சரி பார்த்துக் கொள்ளலாம். அதன்படி பிஎம் கிசான் அதிகாரபூர்வ இணையதளத்துக்குள்  சென்று பயனாளியின் நிலைப்பக்கத்தை அணுகி பயனாளி நிலை என்பதை கிளிக் செய்து ஆதார் எண் அல்லது கணக்கு எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பிறகு தரவைப் பெறு என்பதை கிளிக் செய்து பயனாளியின் நிலையை சரிபார்த்து கட்டண நிலையை சரிபார்த்தல் வேண்டும். \

விவசாயி உதவித்தொகை

இதனைத் தொடர்ந்து தனிப்பட்ட தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு  நிலை என்னவென்று காட்டப்படும். மேலும் பிஎம் கிசான் திட்டத்தின் 18வது தவணைத்தொகை  வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் நிலையில் உடனடியாக விவசாயிகள் இகேஒய்சி அப்டேட்டை சரிபார்த்துக் கொள்ளும்படி  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!

From around the web