வைரலாகும் போட்டோ... கணக்கு பரீட்சை பேப்பரில் “நமக்கு தெரியாது solution" ... மாணவன் அலப்பறை பதில்!

பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் தேர்வுகளில் சரியான பதில்களுக்கு தான் மதிப்பெண்கள் தருவார்கள். சில நேரங்களில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் பதில்களை மாணவர்கள் எழுதிவிடுகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் ஒரு கணித ஆசிரியர் மதிப்பீடு செய்த பேப்பரில், மிகவும் வேடிக்கையான பதிலைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்துள்ளனர். அந்த மாணவர், 4வது கேள்விக்கு பதிலளிக்கும் இடத்தில் கணிதம் குறித்த கேள்விக்கு பதில் எழுதவில்லை.
“நமக்குத் தெரியாது numerical, நமக்குத் தெரியாது solution, நமக்குத் தெரியாது answer, அப்போ நமக்கென்ன வேணும்? Fanta-Fanta, நமக்கு வேணும் Fanta-Fanta” என பதிலை பாடலாக எழுதியுள்ளார்.
மாணவர் எந்த ஒரு கணித விளக்கத்தையும் தராமல், நேரடியாக ‘Humko Fanta Mangta’ என பேப்பரில் எழுதி நிரப்பியிருப்பது அனைவரையும் சிரிக்க வைத்தது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக ‘rvcjinsta’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பதிலின் படம் பதிவேற்றம் செய்யப்பட்டு, இதுவரை 4 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.
அதனை பார்த்த நெட்டிசன்கள், “சின்ன வயதில் நாமும் இப்படி ஏதாவது எழுதிருக்கணும்” என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆசிரியர் அந்த மாணவருக்கு எழுதிய பதில் தான் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது — “Office-ல சந்திக்கலாம்!” என கூறியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் ஆசிரியரின் கூலான பதிலை பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!