நாளை திருப்பதி திருமலையில் விஐபி ப்ரேக் தரிசனம் ரத்து!
உகாதி பண்டிகை ஆழ்வார் திருமஞ்சணத்தை முன்னிட்டு நாளை திருப்பதி திருமலையில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்து திருமலை ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலையில் உகாதி விழா வரும் ஏப்ரல் 9 ம் தேதி நடைபெறுகிறது. இந்த உகாதி பண்டிகயை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அன்றைய தினம் பல்வேறு சேவைகளை ரத்து செய்துள்ளது. அதன்படி உகாதி தினத்தை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாத சேவை நடத்தப்பட்டு பின்னர் கோவில் சுத்தம் செய்யப்படுகிறது.
நாளை காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசுவாமி மற்றும் விஷ்வக்சேனருக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காலை 7 மணி முதல் 9 மணிக்குள் சுவாமி விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி ஊர்வலமாக கோவிலுக்குள் நுழைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உகாதி பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 9-ஆம் தேதி TTD நடத்தும் திருமலை ஆர்ஜித சேவை, அஷ்டதள பாதபத்மாராதனம், கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம் ஆகிய நிகழ்ச்சிகளை TTD ரத்து செய்துள்ளது.
உகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு நாளை ஏப்ரல் 2ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை விஐபி பிரேக் தரிசனத்தை TTD நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!