வங்கதேச வன்முறை.. இந்து மத தலைவருக்கு வாதாடிய முஸ்லிம் வழக்கறிஞர் படுகொலை!

 
 சின்மோய் கிருஷ்ண தாஸ்

வங்கதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருந்து வருகின்றனர். இந்நிலையில் வங்கதேச இந்து மத தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் டாக்கா விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இஸ்கான் அமைப்பின் தலைவராக உள்ள அவர், நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு கிருஷ்ண தாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.


இந்து  போராட்டத்தை தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே சின்மோய் கிருஷ்ணா தானாவை விடுவிக்கக் கோரி இந்துக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டாக்கா, சிட்டகாங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. இந்து மத தலைவர் கைது செய்யப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், வங்கதேச நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த போராட்டங்களுக்கு இடையே இந்து தலைவரும், இஸ்கான் துறவியுமான சின்மோய் கிருஷ்ண தாஸ் சார்பில் ஆஜரான முஸ்லிம் வழக்கறிஞர் கொல்லப்பட்டார். விசாரணையில், இறந்தவர் சைபுல் இஸ்லாம் அலிப் வழக்கறிஞராக இருப்பது தெரியவந்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web