பகீர் வீடியோ... முதல்வரின் வீட்டை சூழ்ந்த போராட்டக்காரர்கள்... மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

 
மணிப்பூர்

 மணிப்பூர் மாநிலத்தில் ஜிரிபாம் மாவட்டத்தில் போரோபெக்ரா  கிராமத்தில் நவம்பர்  11ம் தேதி நடந்த துப்பாக்கிச் சண்டையில் நிவாரண முகாம்களை தாக்கியுள்ளனர். இதில் 6  பேர் கலவரக்காரர்களால் கடத்தப்பட்டனர். இந்த 6 பேரும்  கொல்லப்பட்டதால் நேற்று நவம்பர் 16ம் தேதி வெள்ளிக் கிழமை இரவு முதல் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில்  போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நேற்று இரவு பாஜகவை சேர்ந்த முதல்வர்   பைரன் சிங்கின் வீட்டைத் தாக்க முயற்சி செய்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.   போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்தனர். முதலமைச்சர் மருமகன் ராஜ்குமார் இமோ சிங் வீட்டுக்குள் புகுந்த பொதுமக்கள், அங்கிருந்த நாற்காலிகள் உட்பட பல  பொருள்களுக்கு தீவைத்தனர்.

மணிப்பூர்

 இதனை கட்டுப்படுத்தும் வகையில்   5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 7 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.  மணிப்பூரில் சட்டம் – ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி  பாதுகாப்புப் படைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web