விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்... எஸ்பி அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கும் பொறுப்பாளர்கள், சிலை தயாரிப்பாளர்கள் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
அதன்படி ஏற்கனவே விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க வேண்டும். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஊர்வல பாதைகளில் மட்டுமே சிலைகளை எடுத்து செல்ல வேண்டும். நிறுவப்படும் சிலைகள் வழக்கம்போல் தூய்மையான களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருட்களால் செய்யப்பட்டதாக இருக்க கூடாது. சிலையின் உயரமானது 10 அடிக்கு மேல் இருக்க கூடாது (நீதிமன்ற ஆணைப்படி).
வழக்கம்போல் ஒவ்வொரு சிலைகளுக்கும் 2 தன்னார்வலர்கள் நியமனம் செய்து, சுழற்சி முறையில் அந்தந்த சிலைகளுடன் 24 மணி நேரமும் இருக்க வேண்டும், சிலை இருக்கும் பகுதிகளில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தபட வேண்டும், விநாயகர் சிலைகள் நிறுவுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.
விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை. மேலும் விதிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடத்த காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்து உள்ளார்.
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!