உஷார்... விநாயகர் சதுர்த்தி கொண்டாட புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு!

 
விநாயகர்
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி  செப்டம்பர் 7ம் தேதி சனிக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் நிறுவுதல் குறித்த  தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை  வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் மற்றும் சிலை நிறுவும் குழுக்கள் இந்த வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

விநாயகர் உயர்நீதிமன்றம்

புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி  சிலைகள் நிறுவப்படும் இடத்தின் நில உரிமையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு துறைகளிடமிருந்து முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும்.  தீயணைப்புத்துறை மற்றும் மின்வாரியம் ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகளை பெற்றிருக்க வேண்டும். சிலையின் உயரம் அடித்தளத்திலிருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற பொது இடங்களின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிலைகள் நிறுவும் போது சுற்றுப்புற சூழலை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை தவிர்த்து, அரசு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விநாயகர்

இந்த புதிய வழிகாட்டுதல்கள், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சிறப்பாக கொண்டாட உதவியாக இருக்கும் அத்துடன் பொது நலனையும் கருத்தில் கொண்டு வகுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி, சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழலில் பண்டிகையை கொண்டாட உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web