ராகுல் காந்தி சொல்லி தான் நடிகர் விஜய் கட்சி தொடங்கினார்... விஜயதாரணி பேட்டி!

 
விஜயதரணி
 

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு ராகுல்காந்தி தான் காரணம் என்று பாஜக விஜயதாரணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பா.ஜனதாவில் இணைந்த விஜயதாரணி, சென்னை ராயப்பேட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பேசிய போது, ‘நன்றாக உழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் தான் பா.ஜனதாவுக்கு வந்தேன். வந்தேன். அதற்கு பதவி தேவை.பாஜகவில் இணைந்து 6 மாதங்கள் ஆகிறது. அனைவரும் பேசி எனக்கு நல்லது செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது' என்று பேசினார். இது, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜயதரணி

இந்நிலையில், சென்னையில் விஜயதாரணி நிருபர்களிடம் பேசுகையில், “தமிழக சட்டசபையில் காங்கிரஸ் முதன்மை கொறடா, அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் என பதவிகளை துறந்து, பா.ஜனதாவில் சேர்ந்தேன். அந்தநேரம், நாடாளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அதனால், நிச்சயம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருக்கும் என்று கூறப்பட்டது. முதல் வேட்பாளர்கள் பட்டியலில் என் பெயர் வந்தது. ஆனால், மூத்த தலைவர் ஒருவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். 

விஜய் மக்கள் இயக்கம்

அவருக்காக நான் தேர்தல் பணியாற்றினேன். ஆனால், கடந்த தேர்தலைவிட 60 ஆயிரம் வாக்குகள் குறைவாகவே பதிவானது. நடிகர் விஜய் தற்போது கட்சி தொடங்கி உள்ளதற்கு காரணமே எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நடிகர் விஜய் ராகுல் காந்தியை சந்தித்தபோது, காங்கிரசில் ஒரு பதவி வேண்டும் என்று மட்டும்தான் கேட்டார். ஆனால், ராகுல்காந்தி, ‘தமிழகத்தில் நீங்கள் பெரிய நட்சத்திரம். அதனால், நீங்கள் தனி கட்சி தொடங்கியே பணியாற்றலாம்' என்றார். அதன் பிரதிபலிப்புதான் விஜய் கட்சி ஆரம்பித்தது” என்று கூறினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web