விஜய்க்கு அடி இல்ல பேரிடி... அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

 
தவெக
 

தமிழகத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை பிப்ரவரியில் தொடங்கினார். 2026ம் ஆண்டு தேர்தல் தான் இலக்கு என அறிவித்திருந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 22ம் தேதி வியாழக்கிழமை தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

தவெக

இந்நிலையில் அந்த கொடியில் சட்டத்திற்கு புறம்பான மற்றும் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பான சின்னங்கள் பதிக்கப்பட்டு இருப்பதை கண்டித்து நடிகர் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  சென்னை ஆர்.கே நகர் பகுதியில் வசித்து வருபவர்  ஆர்டிஐ செல்வம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார் 

தவெக

அதில்  தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். அந்த கொடியில் சட்டத்திற்கு புறம்பாக கேரளா மாநிலத்தின் போக்குவரத்து கழகத்தின் அரசு சின்னமான யானை சின்னம் இடம் பெற்றுள்ளது. மேலும் வெள்ளாளர் சமூகத்தில் பயன்படுத்தி வரும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கொடியின் நிறமும், ஸ்பெயின் நாட்டின் தேசிய கொடியின் நிறமும், ஈழத் தமிழர்களின் சின்னமாக விளங்கும் வாகை பூவின் சின்னத்தையும் தவறாக பயன்படுத்தி உள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web