வைரல் வீடியோ... விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா வந்தனாவுடன் டேட்டிங் !

 
விஜய் தேவரகொண்டா


 
விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் டேட்டிங் சென்றவ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராஷ்மிகாவின் 'சிகந்தர்' திரைப்படம் வெளியான நிலையில் இருவரும் ரகசியமாக மதிய உணவு அருந்த சென்றிருந்தனர். இதனால் அவர்களின் உறவு குறித்த வதந்திகள் மீண்டும் பரவத் தொடங்கின. ராஷ்மிகா மந்தனா உணவகத்திற்குள் முதலில் வந்தபோது, மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்து தன்னுடைய அடையாளத்தை மறைக்க முயற்சித்தார். ரசிகர்கள் அவரை  அடையாளம் கண்டுவிட்டனர்.


அவர்களின் வேண்டுகோளால்  சிறிது நேரம் மாஸ்க்கை கழற்றி போஸ் கொடுத்தார். அவர்கள் தொடர்ந்து புகைப்படம் எடுக்க முயற்சித்தும்  அதைப் பொருட்படுத்தாமல் உணவகத்திற்குள் விரைவாகச் சென்றார். சிறிது நேரத்துக்குப் பிறகு, விஜய் தேவரகொண்டா மாஸ்க் மற்றும் குல்லா அணிந்து, யாரும் அடையாளம் காணாதபடி உணவகத்தின் பின்புறம் வழியாக வந்தார். அவர் தலையைக் குனிந்தபடியே புகைப்படக் கலைஞர்களைத் தவிர்த்து, உள்ளே சென்றார்.

விஜய் தேவரகொண்டா


இருவரும் தங்கள் உறவை வெளிப்படையாக உறுதிப்படுத்தாவிட்டாலும், அவர்கள் ஒன்றாக மாலத்தீவில் விடுமுறையைக் கழித்தபோது 2023 முதல் வதந்திகள் பரவத் தொடங்கின. அவர்கள் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், பலமுறை சூசகமாகத் தெரிவித்துள்ளனர். புஷ்பா 2 நிகழ்ச்சியில், ராஷ்மிகாவிடம் அவரது வருங்கால கணவர் திரைப்படத் துறையைச் சேர்ந்தவராக இருப்பாரா எனக் கேட்டபோது, "எல்லோருக்கும் அது பற்றித் தெரியும்," என பதில் அளித்திருந்தார்.  சமீபத்திய நேர்காணலில் விஜய் தேவரகொண்டா, தான் ஒரு உறவில் இருப்பதாக கூறியிருந்தார்.  "எனக்கு 35 வயது; நான் சிங்கிளாக இருப்பேன் என்று நினைக்கிறீர்களா?" எனக் கூறினார். இந்த ஜோடியின் ரசிகர்கள் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் ஆர்வத்துடன் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்,  தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ரகசியமாகவே வைத்துள்ளனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web