2026ல் விஜய் தான் முதலமைச்சர்... கெத்து காட்டும் புஸ்ஸி ஆனந்த்!

 
தவெக

 நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். இக்கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடைபெற விதிக்கப்பட்ட  33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.  முதல் மாநில  தவெக மாநாடு ஏற்பாடு குறித்து ஆலோசனை செய்ய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தலைமையில், சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தவெக

முதன் முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியுடன் கூடிய துண்டு அணிந்து ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், “தளபதினா… நம் தலைவர் தளபதி மட்டும் தான். காவல்துறை எத்தனை கண்டிஷன் போட்டாலும் சரி, தளபதி சொன்னா அதை செய்ய லட்சம் பேர் இருக்காங்க.
அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் தவெகவின் முதல் மாநாட்டில் பெண்கள் தான் அதிகமாக கலந்து கொள்வார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாநாடு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்கிற அளவுக்கு தவெக மாநாடு நடைபெறும். மாநாட்டிற்கு மகளிர் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதல் மாநாடு வெற்றி மாநாடாக இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

தவெக


காவல்துறையின் விதிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறும். நம்முடைய இலக்கு 2026 தான், 2026ல் தவெக தலைவர் விஜய் தான் முதலமைச்சர்” என நிர்வாகி மத்தியில் உற்சாகத்துடன் பேசியிருக்கிறார்.மேலும் “கட்சிக்காக உழைத்திருக்கிறேன் எனக்கு பதவி வேண்டும் என்று வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டால் எனக்கு கோபம் வரும். எதுவாக இருப்பினும் என்னை நேரடியாக அணுக வேண்டும். தவெக நிர்வாகிகளுக்கு என தனி அனுமதிச் சீட்டு கிடையாது, யார் வேண்டுமானாலும் தவெக மாநாட்டில் கலந்து கொள்ளலாம். தவெக மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து நிர்வாகிகளும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். முக்கிய நிர்வாகிகள் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிந்து வர வேண்டும் ” எனக் கூறியுள்ளார்.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web