நடனமாடும் போது மேடையில் தவறி விழுந்த வித்யாபாலன்... வைரலாகும் வீடியோ!
மேடையில் ‘அமி ஜே டோமர்’ பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்த போது திடீரென நடிகை வித்யாபாலன் தவறி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக சுதாரித்துக் கொண்ட நடிகை வித்யாபாலன் தனது நடனத்தைத் தொடர்ந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், நடிகை வித்யாபாலன் தற்போது நலமாக இருக்கிறாரா? என்று ரசிகர்கள் தங்களது அக்கறையைக் காட்டி வருகின்றனர்.
Now that's what we call a performance! 🔥❤️#VidyaBalan and #MadhuriDixit perform on #AmiJeTomar3.0. #FilmfareLens pic.twitter.com/xMCE4dIz1T
— Filmfare (@filmfare) October 25, 2024
பாலிவுட்டின் சூப்பர் ஹிட் படத்தின் மூன்றாம் பாகம் வரும் நவம்பர் மாதம் வெளியாகிறது. படத்திற்கான புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக நடிகை வித்யாபாலன் மற்றும் நடிகை மாதுரி தீட்ஷித் ஆகியோர் அந்தப் படத்தில் இருந்து ‘அமி ஜே டோமர்’ என்ற பாடலுக்கு மேடையில் நடனமாடினார்கள்.
அப்போது நடனமாடிக் கொண்டிருந்த வித்யாபாலன் திடீரென மேடையில் தவறி விழுந்து விட்டார். உடனே சமாளித்து எழுந்து மீண்டும் தனது நடனத்தைத் தொடர்ந்தார். இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் வித்யாபாலனின் சமாளிப்பு திறமையை பாராட்டி, அவருக்கு காயம் ஏதும் ஏற்பட்டதா என்று விசாரித்து வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!