எங்களை காப்பாத்துங்க பிரதமரே.. பெண் பணயக் கைதிகள் கதறும் வீடியோ!!

 
இஸ்ரேல்

அக்டோபர் 7ம் தேதி தொடங்கப்பட்ட இஸ்ரேல் – ஹமாஸ் போர்  3 வாரங்களை கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.  உலக நாடுகள் பல இருதரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இருநாடுகளும் அதை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் உணவு தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான  குற்றங்கள் தொடர்ந்து வருகின்றன. பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.  


 

நாளுக்கு நாள் தாக்குதல் அதிகரித்து வருவதால் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இருதரப்பிலும்  இதுவரை 8,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸின் தாக்குதலில் இஸ்ரேலில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.   அதன்படி  இரு தரப்பின் இறப்பு எண்ணிக்கை தற்போது 9,706 ஆக உள்ளது. முக்கிய துறை அதிகாரிகள் பெண்கள் பிணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்றைய தினம் ஹமாஸால் வெளியிட்ட ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அக்டோபர் 7ம் தேதி தாக்குதல்களின் போது, ஹமாஸால் பிடிப்பட்ட 3 இஸ்ரேல் பெண் பணயக் கைதிகள் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டனர்.

இஸ்ரேல்
அந்த வீடியோவில் 3  இஸ்ரேல் பெண்களும் யெலினா ட்ருபனோப், டேனியல் அலோனி மற்றும் ரிமோன் கிர்ஷ்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும், பயங்கர குழுவான ஹமாஸ் தாக்குதலின் போது பிரதமர்  இஸ்ரேலிய குடிமக்களைப் பாதுகாக்கத் தவறினார்.  ஹமாஸிடம் சிக்கியவர்களை மீட்டு வீடு திரும்ப உதவ தவறிவிட்டார் என   இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பகிரங்க குற்றசாட்டை முன் வைத்துள்ளனர்.  போர்நிறுத்தம் செய்து பணயக்கைதிகளை மீட்கும் முயற்சியிலும் பிரதமர் படுதோல்வியடைந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.   இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன பணயக் கைதிகள் அனைவரையும் விடுவித்து இஸ்ரேல் பணயக் கைதிகள் அனைவரையும் திரும்பப்பெற வேண்டும் என  பிரதமர் நெதன்யாகுவை வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து   இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது ஹமாஸின் வாக்குறுதி உளவியல் பயங்கரவாதம் எனக் கூறியுள்ளார். 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web