விடாமுயற்சி’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்; வீடியோ வெளியிட்ட படக்குழு!
அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் முழுமையாக நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டு படக்குழுவினர் அப்டேட் கொடுத்துள்ளனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
SUCCESSFUL COMPLETION OF "VIDAAMUYARCHI" schedule in the endless terrains of AZERBAIJAN, BAKU! 🤗#VidaaMuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl… pic.twitter.com/nrg1peZiZN
— Lyca Productions (@LycaProductions) July 21, 2024
இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. சிறு இடைவேளைக்கு பின் நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கியது. படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்படும் வீடியோவை பகிர்ந்து அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அப்டேட் கொடுத்தார்.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து இரண்டு போஸ்டர்களை வெளியிட்டனர். சமீபத்தில் திரிஷா மற்றும் அஜித் இணைந்து இருக்கும் ஒரு விண்டேஜ் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.
கடந்த சில நாட்களாக அஜர்பைஜானின் நடந்து வந்த படப்பிடிப்பு பணிகள் நேற்று முடிவடைந்தது. இதுகுறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் படக்குழு ஒன்றாக இருந்த க்ரூப் போட்டோவை பதிவிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகும். ஆனால் அதில் எதிலும் இயக்குனர் மகிழ் திருமேனி அஜித்துடன் காணப்படவில்லை. தற்பொழுது வெளியிட்ட புகைப்படத்தின் அஜித் பக்கத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி காணப்படுகிறார். அடுத்த படப்பிடிப்பு பணி ஐதராபாத்தில் 8 நாட்கள் நடைப்பெறவுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா