பிரபல தமிழ்பட இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் ஓம் சக்தி ஜெகதீசன் காலமானார்! இன்று மாலை இறுதிசடங்குகள்!

 
ஓம்சக்தி ஜெகதீசன்

பழம்பெரும் இயக்குனரும், வசனகர்த்தாவும்,  திரைப்பட எழுத்தாளருமான ஓம் சக்தி ஜெகதீசன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 95.

திரைக்கதை ஆசிரியரும், வசனகர்த்தாவும், இயக்குனருமான ஓம் சக்தி ஜெகதீசன் அவர் 100க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழில் ‘ஆயிரத்தில் ஒருத்தி’, ‘ஜானகி சபதம்’, ‘ஸ்கூல் மாஸ்டர்’, ‘கடவுள் மாமா’, ‘தேவி தரிசனம்’, ‘சுப்ரபாதம்’, ‘தாய் மூகாம்பிகை’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 

‘மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி’, ‘சமயபுரத்தாளே சாட்சி’, ‘மேல்மருவத்தூர் அற்புதங்கள்’, ‘பதில் சொல்வாள் பத்ரகாளி’, ‘கைகொடுப்பாள் கற்பகாம்பாள்’, ‘ஒரே தாய் ஒரே குலம்’, ‘இவர்கள் இந்தியர்கள்’ ஆகிய படங்களுக்கு கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

ஓம்சக்தி ஜெகதீசன்

சிவாஜி நடிப்பில் முழுக்க முழுக்க கப்பலிலேயே நடுக்கடலில் படமாக்கப்பட்ட ‘சிரஞ்சீவி’ படத்தை கதை, வசனம் எழுதியதுடன் தயாரித்தும் இருக்கிறார். எம்.ஜி.ஆரின் ‘இதயக்கனி’ படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். ‘திசை மாறிய பறவைகள்’ படத்திற்காக தமிழக அரசின் விருது பெற்றுள்ளார். 

வயோதிகம் மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார். அவரது உடல் இன்று சென்னை மாலை போரூர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. ஓம் சக்தி ஜெகதீசனுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது சொந்த ஊர் நாகப்பட்டினம். கதாசிரியர் ஆர்.கே.ஷண்முகத்தின் உறவினர் இவர் சண்முகத்தோடு இணைந்து ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு வசனம் எழுதி இருக்கிறார். 

இவரது இயற்பெயர் ஜெகதீசன். தொடர்ந்து ஜானகி சபதம், கடவுள் மாமா, தேவி தரிசனம், ஆயிரத்தில் ஒருத்தி, சுப்ரபாதம், தாய் மூகாம்பிகை போன்ற பல ஆன்மிகப் படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதி வந்தவர் தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, சமயபுரத்தாளே சாட்சி, மேல்மருவத்தூர் அற்புதங்கள், பதில் சொல்வாள் பத்ரகாளி போன்ற படங்களுக்கு கதை, வசனம் எழுதி இயக்குநராகவும் பணியாற்றி ஆன்மிகப் படைப்புகளுக்கு  தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாலேயே ஓம் சக்தி ஜெகதீசன் என பெயரை மாற்றிக் கொண்டார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web