பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான மோகன் நடராஜன் காலமானார்... திரையுலகினர் நேரில் அஞ்சலி!
பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான மோகன் நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 71.
கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் சரியில்லாததால் சிகிச்சைப் பெற்று வந்த தயாரிப்பாளர் மோகன் நடராஜன் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்றிரவு காலமானார்.
ஸ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் என்கிற பெயரில் 1986ல் மோகன் நதியா நடிப்பில் வெளிவந்த “பூக்களைப் பறிக்காதீர்கள்” படத்தை தயாரித்ததன் மூலமாக திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து, பிரபு நடித்த 'என் தங்கச்சி படிச்சவ', சத்யராஜ் நடித்த 'வேலை கிடைச்சிடுச்சி', அருண்பாண்டியன் நடித்த 'கோட்டை வாசல்', விஜய் நடித்த 'கண்ணுக்குள் நிலவு', அஜித் நடித்த 'ஆழ்வார்', சூர்யா நடித்த 'வேல்' ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். விக்ரம் நடிப்பில் வெளியான 'தெய்வத் திருமகள்' படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
“நம்ம அண்ணாச்சி, சக்கரைத்தேவன், கோட்டை வாசல், புதல்வன், பிள்ளைக்காக, பாட்டுப்பாடவா, அரண்மனை காவலன், பதவிப்பிரமாணம், மகாநதி, பட்டியல்” உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம் 3 மணிக்கு சென்னை, திருவொற்றியூரில் நடைபெற உள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா