பிரபல நடிகர், கராத்தே வீரர் ஹுசைனி சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு!

 
ஹூசைனி

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கராத்தே வீரரும், நடிகருமான ஷிஹான் ஹுசைனி சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பிரபல கராத்தே மாஸ்டரும், நடிகருக்கான ஷிஹான் ஹுசைனி தனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாக ஊடகங்களில் கூறியிருந்தார். வில் வித்தை பயிற்சியாளர்கள் குறித்தும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.  மரணத்திற்குப் பின்னர் தனது உடலை தானம் செய்வதாகவும் அறிவித்திருந்தார்.

 ஷிகான் ஹுசைனி

இதையடுத்து துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தலின்படி ஷிஹான் ஹுசைனிக்கு மருத்துவச் சிகிச்சை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

இந்நிலையில் ரத்த புற்றுநோயால் தீவிர சிகிச்சை பெற்று வந்த, சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரபலங்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.

ஹுசைனி

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி  நடிகராக அறிமுகமானார். இதையடுத்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார். விஜய் நடித்த பத்ரி படத்தில், விஜய்க்கு பயிற்சி கொடுக்கும் ஆசிரியராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதைத் தவிர்த்து 400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web