வெம்பக்கோட்டை அகழாய்வு.. 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தால் ஆன மணி கண்டெடுப்பு!

 
வெம்பக்கோட்டை தங்க மணி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல் குளத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் ஆயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், இதுவரை நடந்த அகழாய்வில் சுடுமண் உருவ சிலைகள், சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லுகள் உள்ளிட்ட 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட பழமையான பழங்கால பொருட்கள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது இங்கு மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவம்பர் 9) 1.28 மீட்டர் ஆழத்தில் தோண்டப்பட்ட குழியில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தால் ஆன மணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ’’பொலந்தொடி தின்ற மயிர் வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து' (நெடுநல்வாடை- 141) பொன் வளையல்கள் தழும்பு உண்டாக்கிய முன் கையில், வலம்புரிச் சங்கால் செய்த வளையல்களுடன் காப்பு நூலைக் கட்டியிருந்தாள் பெண்ணொருத்தி என்று நெடுநல்வாடை நூல் உரைக்கிறது.

பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும், பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த நாகரிகமாக இருந்தது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அகழாய்வில் இன்று 1.28 மீட்டர் ஆழத்தில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தினால் ஆன மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது’’  என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web