வெம்பக்கோட்டை அகழாய்வு: 6,000 ஆண்டுகள் பழமையான ஜாஸ்பர் கற்கள் கண்டெடுப்பு!
விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு ஜூன் 18ம் தேதி முதல் நடந்து வருகிறது.தங்க காசு, செப்பு காசுகள், உடைந்த சுடுமண் உருவ சிலை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள் என 2 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குனர் தெரிவித்துள்ளார்.
''சுறா ஏறுஎழுதிய மோதிரம் தொட்டாள்'' எனும் கலித்தொகை பாடல் மூலம் பழந்தமிழர்கள் அணிகலன்களை வடிவமைத்து அணிந்தனர் என்பது புலனாகிறது.
— Thangam Thenarasu (@TThenarasu) November 8, 2024
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை- விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் விலங்குகளை… pic.twitter.com/1Au1l2k1ew
இந்நிலையில், சமீபத்தில் தோண்டப்பட்ட அகழாய்வு குழியில், 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நகைகள் தயாரிக்க பயன்படும் ஜாஸ்பர் மற்றும் சர்ட் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழ்வாராய்ச்சி இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், "இக்கற்கள், கற்காலத்தில் வாழும் மனிதர்கள், விலங்குகளை வேட்டையாடும் கருவிகள் தயாரிக்க, மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த கற்கள் தற்போது புழக்கத்தில் இல்லை,'' என்றார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ''சுறா ஏறுஎழுதிய மோதிரம் தொட்டாள்'' எனும் கலித்தொகை பாடல் மூலம் பழந்தமிழர்கள் அணிகலன்களை வடிவமைத்து அணிந்தனர் என்பது புலனாகிறது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை- விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் விலங்குகளை வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்தகு சான்றுகள், அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் பெருங்குடி மக்களின் வடிவமைப்பு கலையை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!