வீர தீர சூரன் 2 படத்திற்கு சிக்கல்... வெளியிட இடைக்கால தடை!

 
வீர தீர சூரன் 2


விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன் 2' படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் நடிப்பில் 62வது படமான 'வீர தீர சூரன் 2' படம் இன்று வெளியாக உள்ள நிலையில், படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.

வீர தீர சூரன் 2

இந்த படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொதுவாகவே சினிமாவில் எந்த ஒரு படமும் முதல் பாகம் வெளியான பின்னர்தான் இரண்டாம் பாகம் வெளியாகும். ஆனால் இயக்குனர் அருண்குமாரை பொறுத்தவரை அவர் முதலில் 2ம் பாகத்தை இயக்கி வெளியிடுகிறார். அருண்குமாரின் இந்த வித்தியாசமான முயற்சி பாராட்டுக்குரியது.  இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், வீர தீர சூரன் 2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, இப்படத்திற்கு மும்பையை சேர்ந்த B4U என்ற தயாரிப்பு நிறுவனமும் பண முதலீடு செய்திருக்கிறது. அதனால் அந்த நிறுவனத்திற்கு இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை தயாரிப்பாளர் எழுதி கொடுத்துவிட்டாராம். ஆனால் ஒப்பந்தத்தில் உள்ளபடி இன்னும் படம் ஓ.டி.டி உரிமை விற்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதற்குள் படம் வெளியாக தயாராகிவிட்டது. ரிலீஸ் தேதி அறிவித்ததால் படத்தை ஓ.டி.டி.யில் விற்க முடியவில்லை.

வீர தீர சூரன் 2

இதனால் மும்பை சேர்ந்த B4U நிறுவனம் முதலீடு செய்த தொகையில் 50 சதவீதம் நஷ்டயீடு வழங்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது. அதாவது, படத்தை நாளை காலை 10.30 மணி வரை வெளியிடக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web