செப்.17ல் மகளிர் மாநாடு - விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு!

 
பாஜகவிற்கு தோல்வி பயம்! தொல்.திருமா அனல் பறக்கும் குற்றச்சாட்டு!
செப்டம்பர் 17ம் தேதி விழுப்புரத்தில் அல்லது கள்ளக்குறிச்சியில் மகளிர் மாநாடு நடத்த இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 17ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள். இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் அடுத்த ஒரு மாத காலத்துக்கு தமிழகத்தில் போதை ஒழிப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முகநூல் நேரலையில் பேசிய அவர், “ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்றம் கூடி, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கின்றனர். ஆக.12 வரை கூட்டத் தொடர் நடைபெறும் என தெரிகிறது. அதன் பின்னர் தீவிரமாக கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்த இருக்கிறோம். மாவட்டச் செயலாளர்களை நியமித்த பின்னர், அவர்களுக்கு துணை பொறுப்பாளர்களை நியமிக்க இயலவில்லை.

பாஜகவிற்கு தோல்வி பயம்! தொல்.திருமா அனல் பறக்கும் குற்றச்சாட்டு!

இம்மாதம் 20-ம் தேதி சென்னையில் விசிக மாவட்டச் செயலாளர்கள் மட்டும் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில்  பிற்பகல் 3 மணியளவில் ஒருங்கிணைக்கப்படும்.ஆக.17-ம் தேதி தமிழர் எழுச்சி நாள். ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு கருப்பொருளை முன்வைத்து செயல்திட்டத்தை அறிவிப்போம். இந்த ஆண்டு மது உள்ளிட்ட போதைப் பொருள் ஒழிப்பு என்பதை கருப்பொருளாக எடுத்துக் கொள்ள இருக்கிறோம். இது குறித்து செப்.17 வரையிலான ஒரு மாத காலத்துக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறோம். 

திருமா

இதைத் தொடர்ந்து மகளிர் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். பெரியார் பிறந்தநாளான செப்.17 அந்த மாநாடு நடத்தப்படவுள்ளது. கள்ளக்குறிச்சி அல்லது விழுப்புரம் மாவட்டத்தில் மாநாடு நடைபெறும். இது விசிக வரலாற்றில் மைல் கல்லாக அமையும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web