குறையும் வந்தே பாரத் ரயில் கட்டணம்.. குட் நியூஸ் சொன்ன மத்திய அமைச்சர்!

 
சோமண்ணா

வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்படும் என ரயில்வே துறை இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்துள்ளார்.  பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, ஏழை, நடுத்தர மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பயணம் செய்யும் வகையில் வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம்.

இதுகுறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினோம். ரயில்வே துறையின் செயல்பாடு ராணுவத்தைப் போலவே உள்ளது. ராணுவம்தான் நாட்டில் நம்பர் ஒன். ரயில்வே துறை 2வது இடத்தில் உள்ளது. அதன்படி 2 துறைகளின் செயல்பாடுகள் இருக்கும். இவ்வாறு கூறினார்.  வந்தே பாரத் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. வந்தே பாரத் அதிவேக ரயில். தற்போது நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு 55க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை சென்னை ஐசிபியில் தயாரிக்கப்படுகின்றன.

வந்தே பாரத்

தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் - மைசூர், சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, திருவனந்தபுரம் - காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர, பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. நவீன தொழில்நுட்பம், கூடுதல் வசதிகள், பாதுகாப்பு, ஏர் கண்டிஷனிங், வேகம் போன்றவற்றில் பயணிகளுக்கு இந்த ரயில்கள் உதவுகின்றன.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web