சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்க கோரிக்கை!

 
வந்தே பாரத்
 


சென்னை முதல் திருநெல்வேலி வரை இயங்கும் வந்தே பாரத் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமருக்கு பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினரும், குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவருமான எஸ்.ஆர்.ஸ்ரீராம் பிரதமருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தற்போது நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 14.50 மணிக்கு சென்னைக்கு வந்தே பாரத் ரயில் விடப்பட்டுள்ளதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

வந்தே பாரத்

ஆனால் காலை வேளையில் இது போன்று சென்னைக்கு ஒரு வந்தேபாரத் ரயில் விடுவதன் மூலம் நெல்லை, மதுரை, திருச்சி செல்லும் குமரி மாவட்ட பயணிகளுக்கு குறிப்பாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்

இதனை கருத்திற்கொண்டு தற்போது திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு வந்தே பாரத் ரயில் விடப்பட்டுள்ளது. இதில் ரிசர்வேஷன் பயணிகள் மட்டுமே செல்ல முடியும்.

வந்தே பாரத்

ஆதலால் இதனை காலை 5 மணிக்கு கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து விட நடவடிக்கை எடுக்குமாறும்இந்த ரயில் சென்னைக்கு பிற்பகல் 2 மணிக்கே செல்வதால் சென்னையில் இருந்து 2.50க்கு மீண்டும் நாகர்கோவில் புறப்பட்டு இரவு 23.30 மணிக்கு வந்து சேருமாறு இதனை நீட்டிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம். 

இதன் மூலம் குமரி மாவட்ட பயணிகளும், சுற்றுலா பயணிகளும் சென்னைக்கு ஒரே நாளில் செல்லவும், அன்றைய இரவே மீண்டும் நாகர்கோவில் திரும்பவும் நல்ல வசதி ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web