3 மாணவிகளுக்கு வைர கம்மல்; மாணவர்களுக்கு வைர மோதிரம்... நடிகர் விஜய் அசத்தல் பரிசு!
கடந்த ஆண்டை போல இல்லாமல் இந்த வருடம் இரண்டு கட்டங்களாக நிகழ்வு நடக்கிறது. முதல் கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்த 800 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வருகிறார் விஜய். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மதியம் அறுசுவை சைவ விருந்து கொடுக்கப்படுகிறது. தமிழ் தாய் வாழ்த்து முடிந்து நிகழ்வு தொடங்கியதும் விஜய் மாணவர்களிடம் உரையாடினார்.
அப்போது மாணவர்கள் மறைமுகமாக அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் அப்போது தான் நல்லது கெட்டதை பகுத்தாய்ந்து வருங்காலத்தில் நல்ல அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று அறிவுரை வழங்கினார். பின்னர், தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள போதைப் பொருட்கள் பழக்கம் பற்றி குற்றம் சாட்டியவர் மாணவர்கள் அந்த வழியில் செல்லக் கூடாது என்றும் அறிவுரை வழங்கினார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!