வைகுண்ட ஏகாதசி... என்னென்ன சிறப்புக்கள், எப்படி வழிபடுவது? பலன்கள்!
தாய்க்கு நிகரான தெய்வம் இல்லை. காயத்ரி மந்திரத்துக்கு ஈடான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கும் ஈடான விரதமும் இல்லை என்கிறது நமது புராணங்கள். அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் ஏகாதசி விரதம் என்கிறது புராணங்கள்.மூன்று கோடி ஏகாதசி விரத பலனை அளிப்பதால் முக்கோடி ஏகாதசி என்றும் வைகுண்ட ஏகாதசி அழைக்கப்படுகிறது. இந்த வைகுண்ட ஏகாதசியை மோட்ச ஏகாதசி என்றும் சொல்வார்கள். அனைத்து ஏகாதசியிலும் விரதமிருந்து பெறும் பலனை இந்த வைகுண்ட ஏகாதசி அன்று ஒருநாள் இருந்தாலே கிடைத்துவிடுகிறது என்கிறது விஷ்ணுபுராணம்
விஷ்ணு காக்கும் கடவுள் அவருடைய காதுகளில் இருந்து வெளிவந்த அசுரர்களாகிய மது , கைடபர் இருவரும் தேவர்களை கொடுமைப்படுத்த தொடங்கினர். பகவானிடம் முறையிட அவர்களுடன் போரிட தொடங்கினார். இருவரும் விஷ்ணுவின் பாதத்தில் சரணடைந்தனர். “பகவானே…தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு கருணை காட்ட வேண்டும்.” என வேண்டினர்.
அத்துடன் “எம்பெருமானே…தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் வடக்கு வாசல் வழியாக, வெளிவரும் போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களை போக்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்” எனகேட்டுக் கொண்டனர் .அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது . இந்நாளில் “ஓம் நமோ நாராயணாய” என வாயால் உச்சரித்து, மனதால் பிரார்த்தனை செய்து பாவங்கள் நீங்கப் பெற்று, ஸ்ரீமகாலஷ்மியின் பேரருளை பெறுவோம்.வைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் விரதம் இருந்து வழிபட்டு, பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், இம்மையிலும், மறுமையிலும் அவன் பேரருளை பெறலாம்.
ஓம் நமோ நாராயணாய..!!
ஓம் நமோ நாராயணாய..!!
ஓம் நமோ நாராயணாய..!!
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!