கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி உற்சவம்!

 
கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி உற்சவம்!


பூலோக வைகுண்டம் என பேறு பெற்ற ஸ்ரீரங்கத்தில் தினமும் திருவிழா தான். அந்த வகையில் வர இருக்கும் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி அனுசரிக்கப்பட உள்ளது. ஸ்ரீரங்கத்தில் மட்டும் 19 வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகை மாதத்திலே வைகுண்ட ஏகாதசி வரும்

விஜயநகர பேரரசர் ஆட்சி செய்த காலத்தில் தை பிரம்மோற்ஸவ காலத்தில் மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும் தை முதல் பகுதியில் பிரம்மோற்சவமும் எப்படி கொண்டாடுவது என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ஸ்ரீ மணவாள மாமுனிகளின் நியமனத்தின்படி 19 வருடங்களுக்கு ஒருமுறை இந்த மாதிரி வைகுண்ட ஏகாதசி திருவிழாவை கார்த்திகையில் மாற்றியமைத்து வழிஏற்படுத்தி கொடுத்தார்.

கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி உற்சவம்!


அன்றுமுதல் 19 வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகையிலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கத்தில் நடத்தப்படும் அந்த வகையில்
வைகுண்ட ஏகாதசி அட்டவணை
03.12.2021 – திரு நெடுந்தாண்டகம்
04.12.2021 – பகல்பத்து (திருமொழித் திருநாள்) தொடக்கம்
13.12.2021 – மோகினி அலங்காரம்

கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி உற்சவம்!


14.12.2021 – வைகுண்ட ஏகாதசி (பரமபதவாசல் திறப்பு) – அதிகாலை 4.45 மணி ( திருவாய் மொழித் திருநாள்)
19.12.2021 – திருக் கைத்தல சேவை – மாலை 6.00 – 6.15 மணி
21.12.2021 – திருமங்கை மன்னன் வேடுபறி – மாலை 5.30 – 6.00 மணி
23.12.2021 – தீர்த்தவாரி – காலை 11.00 மணி
24.12.2021 – நம்மாழ்வார் மோட்சம் – காலை 6.00 – 7.00 மணி

From around the web