வைகோவுக்கு என்னாச்சு? மருத்துவமனை அனுமதியால் தொண்டர்கள் பரபரப்பு!

 
வைகோ
 

சென்னை ஆயிரம் விளக்கு க்ரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று திடீரென அனுமதிக்கப்பட்டது தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளர் வெற்றிவேல் மகளின் மணவிழாவில் பங்கேற்பதற்காக கடந்த மே மாதம் 25ம் தேதி திருநெல்வேலிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்றிருந்தார். 

இந்தியை திணிக்க முயன்றால் இந்தியா பல நாடுகளாக சிதறும்: வைகோ எச்சரிக்கை

அங்கு பெருமாள்புரத்தில் உள்ள தனது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் வைகோ தங்கியிருந்த போது திடீரென கால் இடறி கீழே விழுந்ததில் வைகோவின் தோள்பட்டையில் அப்போது லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதற்கான ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை திருநெல்வேலியில் எடுத்துக் கொண்ட அவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக உடனடியாக விமானத்தில் சென்னை திரும்பி, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இடது தோளில் 3 இடத்தில் எலும்புகள் உடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

பின்னர் இடது தோளில் ஏற்பட்ட எலும்பு முறிவைச் சரிசெய்ய டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டது. 40 நாட்கள் ஓய்வுக்கு பிறகு, அறுவை சிகிச்சை செய்தால் தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும் என்று வைகோவின் மகன் துரை வைகோ அப்போது கூறியிருந்தார்.

வைகோ

அதன் பின்னர் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வைகோ, பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்பியிருந்தார். 

இந்நிலையில் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டது தொண்டர்களை பரபரப்புக்குள்ளாக்கியது. 

அறுவைசிகிச்சை செய்து வலது கை தோள்பட்டையில் வைக்கப்பட்டிருக்கும் பிளேட்டை அகற்ற நேற்று காலை வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது. இன்னும் ஓரிரு நாட்களில் வைகோ வீடு திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web