இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயார் !

 
இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயார் !


இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதனையடுத்து 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஜைகோவ்-டி (ZyCov-D) தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டிற்கு பயன்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயார் !


அகமதாபாத்தில் அமைந்துள்ள ஜைடோஸ் காடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசியின் விலை முடிவு செய்யப்பட்டு விட்டது. இதனால் மிக விரைவில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி திட்டம் தொடங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.


அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து உற்பத்தியும் தொடங்கப்பட்டு விட்டது. மேலும் தடுப்பூசியின் விலையை பொறுத்தவரையில் தயாரிப்பாளர்கள் கேட்ட விலையை விட குறைவாகவே நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை விட விலை அதிகம் தான் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயார் !


12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. புற்றுநோய், சுவாசம், நரம்பியல், வாத நோய், இதயம், கல்லீரல், இரைப்பை குடல், பிறப்புறுப்பு மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் இதுவே இந்தியாவில் குழந்தைகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசி எனவும் மன்சுக் தெரிவித்துள்ளார்.

From around the web